எய்ம்ஸ் தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட்டை அனுமதி சீட்டாக பயன்படுத்தலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

எய்ம்ஸ் தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட்டை அனுமதி சீட்டாக பயன்படுத்தலாம்


புதுச்சேரி கலெக்டர் அருண் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தள்ளி வைக்கப்பட்ட எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. புதுச்சேரியை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்துள்ள பிற மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை புதுச்சேரி எல்லையை கடப்பதற்கான அனுமதி சீட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
காவல்துறையினரும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் தேர்வு எழுத வருபவர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல் வருகிற 14, 21, 22, 26 ஆகிய தேதிகளில் போஸ்ட்கிராஜுவட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேசன் ரிசர்ச் தேர்வு எழுத வருவோரும் ஹால் டிக்கெட்டை அனுமதி சீட்டாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment