இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி  உள்ளது - மருத்துவ நிபுணர்கள் குழு - ஆசிரியர் மலர்

Latest

01/06/2020

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி  உள்ளது - மருத்துவ நிபுணர்கள் குழு

இந்தியாவில் கொரோனா தொற்று
சமூக பரவலாக மாறி  உள்ளது- நிபுணர் குழு அறிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி  உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று
சமூக பரவலாக மாறி  உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாற வில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் மருத்துவ நிபுணர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.
இந்திய பொது சுகாதார சங்கம், சமூக மருத்துவ சங்கம், இந்திய தொற்று நோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பாக அதற்கான மருத்துவ நிபுணர்களுடன் முறையாக கலந்தாலோசித்து இருக்க வேண்டும். அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அதிகாரிகள் மட்டத்தினரும் முடிவு எடுத்து அறிவித்து விட்டார்கள்.
மேலும் மருத்துவ துறை வல்லுநர்களை சரியாக கலந்தாலோசிக்காமல் நோயை கட்டுப்படுத்து வதற்கான திட்டங்களை வகுத்ததால் அது சரியாக அமையவில்லை. அதாவது தொற்று நோயியல் வல்லுநர்கள், தடுத்து மருத்துவ துறை நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களின் கருத்துக்களை கேட்டறிந்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல் விட்டதால் இப்போது இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மனிதாபிமான நெருக்கடியும் உருவாகி இருக்கிறது.
மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் சென்றடையவில்லை. பொது முடக்கத்திற்கு முன்பாக வெளிமாநில மக்கள் அவரவர் இடங்களுக்கு செல்ல அனுமதித்து இருந்தால் இந்த அளவிற்கு நோய் பரவுதல் ஏற்பட்டிருக்காது. மேலும் அவர்கள் இந்த அளவிற்கு கஷ்டப்படும் நிலையும் உருவாகி இருக்காது.
பொது முடக்கத்தால் ஏற்படும் மரணங்கள், வழக்கமான சுகாதார பணிகள் நிறுத்தப்படுதல், மக்கள் தொகையில் பாதி பேர் வாழ்வாதாரம் இழப்பு போன்றவற்றால் பொது முடக்கத்தை தொடர்ந்து நீடிக்க முடியாது. அவ்வாறு நீடித்தால் இந்தியாவுக்கு அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் தொற்று நோய் பரவுதலை முறையாக கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்
.
அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து நோய் பாதிப்பை கண்டறிய வேண்டும். அது எவ்வாறு பரவியது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
நோய் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை சரியாக அடையாளம் கண்டு அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சுகாதார ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459