தேர்வு துறை இணை இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

08/06/2020

தேர்வு துறை இணை இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று ஹால் டிக்கெட் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையில் பலருக்கு கொரோனா தொற்று பரவி வருவது தற்போது தெரிய வந்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வை நடத்தக்கூடிய தேர்வு துறை இணை இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அவர் தர்மபுரியில் உள்ள அவரது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுத் தேர்வுக்கு பொறுப்பாளராக உள்ள இவருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதால் தேர்வு பணியை அடுத்து யார் கண்காணிப்பார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை
.
இதனால் தேர்வு பணியை மேற்பார்வையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளிக்கல்வி துறையில் ஒரு உதவி இயக்குனர், ஒரு டைப்பிஸ்டு, ஒரு பெண் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது தேர்வை நடத்தக்கூடிய இணை இயக்குனருக்கும் கொரோனா பரவி உள்ளது அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறைக்கு தண்ணீர் வழங்கும் ஓட்டுனர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இதுபோல் பாடநூல் கழகத்தில் அதிகாரி ஒருவரின் டிரைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இதன் பாதிப்பு மாணவ- மாணவிகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.
எனவே கொரோனா பரவுவதை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்கள்? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459