7 ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் கற்பிக்க தடை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

7 ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் கற்பிக்க தடை

பெங்களூரு: கர்நாடகாவில் 7 ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் கற்பிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது
கொரோனா பரவலால் நாடு முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வழி கல்விக்கு கட்டணமும் பெறப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் கற்பித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் வியாழனன்று தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ளியன்று நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் முறை சவாலாக உள்ளதால் அதை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ஏழாம் வகுப்பு வரை ஆன்லைன் வழி கற்பித்தலுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது

No comments:

Post a comment