சென்னை ஐ.ஐ.டி.யில் 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சென்னை ஐ.ஐ.டி.யில் 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகள் அறிமுகம்


மத்திய அரசு வழிகாட்டுதலின் படி சென்னை ஐ.ஐ.டி.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 12ம் வகுப்பு முடித்து பொறியியல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பொறியியல் படித்து வரும் மாணவர்களில், விருப்பமுள்ளவர்கள் onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் இந்த படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த ஆன்லைன் படிப்புகளை முடிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு, சான்றிதழுடன் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களை அவரவர் பயிலும் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டருக்கான மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் 12ம் வகுப்பு முடித்து இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு பொறியியல் தொடர்பான அடிப்படைகளை கற்பிக்கும் வகையில் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பார்கள்.

No comments:

Post a comment