சென்னையில் இன்று ஒரே நாளில் 40 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




12/06/2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 40 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 40 டாக்டர்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும், அங்கு 1, 407 பேர் பாதிக்கப்பட, மொத்த பாதிப்பு 27,398 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 40 டாக்டர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 10 பேரும், எழும்பூர் அரசு மருத்துவமனையில் 4 பேரும், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 16 பேர் என 40 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
40 பேர் மீது வழக்கு
இதனிடையே, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், விதிகளை மீறி வெளியே சுற்றியதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், தனிமைபடுத்தப்பட்டோர் வீட்டை விட்டு சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை பிடித்து அரசு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்
நடமாடும் பரிசோதனை மையம்
சென்னையில் நாளை முதல், 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது
. 15 மண்டலங்களிலும், தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் வாகனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.
42 மாணவர்களுக்கு தொற்று
சென்னை மருத்துவ கல்லூரி ஆடவர் விடுதியில், முதுகலை மாணவர்கள் 58 பேருக்கு நடந்த பரிசோதனையில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459