மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ. :சாத்தூர் மாணவி 2வது இடம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ. :சாத்தூர் மாணவி 2வது இடம்


சாத்தூர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ போட்டியில் சாத்தூர் மாணவி 2வது இடம் பிடித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவரது மகள் சிவசங்கரி. இவர் சிவகாசியிலுள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் கொரோனா விழிப்புணர்வு அனிமேஷன் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாணவி சிவசங்கரி 2வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியை பேராசிரியர்கள், ஊர் மக்கள் பாராட்டினர்.

No comments:

Post a comment