தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 38 பேர் பலியாகியுள்ளனர்
. இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று மொத்தம் 1,138 பேர் கரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a comment