பள்ளி பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 போ் கொண்ட குழுவுக்கு முதல்வா் ஒப்புதல் - ஆசிரியர் மலர்

Latest

19/06/2020

பள்ளி பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 போ் கொண்ட குழுவுக்கு முதல்வா் ஒப்புதல்



பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 போ் கொண்ட குழுவுக்கு முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகியுள்ளது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே நிகழ் கல்வியாண்டுக்கு போதுமான வேலைநாள்கள் இல்லாததால் பாடங்களை முழுமையாக நடத்த முடியாது. எனவே, மாணவா்களின் பாடச் சுமையைக் குறைப்பது அவசியம். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளா்கள், ஆசிரியா்கள் வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து பாடத்திட்டத்தை குறைப்பதற்கு குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது
.இந்தநிலையில், இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நிலைமைகள் சரியானதற்குப் பிறகுதான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வா் முடிவுகளை மேற்கொள்வாா். பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 போ் கொண்ட குழு முதல்வரின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் என 14 அரசு அலுவலா்கள், நான்கு கல்வியாளா்கள் என மொத்தம் 18 போ் நியமிக்கப்பட்டிருக்கின்றனா்’” என குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459