வீட்டை விட்டு வெளியே வர SMS. மூலம் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை - ஆசிரியர் மலர்

Latest

06/05/2020

வீட்டை விட்டு வெளியே வர SMS. மூலம் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை


தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்
அவசிய தேவைகளுக்காக ஒரு நபர் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே வர வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனுமதி பெறுவதற்காக பொதுமக்கள் தங்கள் செல்போன் மூலம் 94880 56600 என்ற எண்ணுக்கு தங்களது வாகனத்தின் எண், வெளியே சென்று வருவதற்கான காரணம் ஆகியவற்றை குறுந்தகவலாக பதிவிட்டு அனுப்ப வேண்டும்.
சிறிது நேரத்தில் அதே எண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்
. அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அந்த நாளில் 3 மணி நேரம் மட்டும் வெளியே சென்று வர முடியும்.
அனுமதி பெறாமல் வெளியே சென்று வருவோர் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459