சாதாரணமாக கிராம புறங்கள் தொடங்கி, டயர் 2 நகரங்கள் வரை ஃபிக்ஸட் டெபாசிட் தான் மக்களுக்குத் தெரிந்த மிகப் பெரிய முதலீடு.
55 அல்லது 60 வயதில் ஓய்வாக உட்காரும் போது அடிப்படைச் செலவுகளுக்குக் கூட மகன் மகள்களிடம் கையேந்தக் கூடாது எனப்தற்காக பணத்தை சேமித்து ஃபிக்ஸட் டெபாசிட்டாக பொட்டு வைப்பார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வரை கூட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பெரிய வங்கிகள்
நல்ல வட்டி விகிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.
நல்ல வட்டி விகிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.
நல்ல வட்டி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஜூன் 2014 காலகட்டத்தில் சுமாராக 9 % வரை வட்டி கொடுத்தார்கள். போடும் பணத்துக்கு 9 % வட்டி என்பது ஓரளவுக்கு நல்ல வருமானம் தான் இதை வைத்து, தங்கள் அடிப்படை செலவுகளையாவது செய்து கொண்டு இருந்தார்கள்.ஆர்பிஐ
ஆனால் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்க, மத்திய ரிசர்வ் வங்கி 0.75 % ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைத்தார்கள். இதனால் பலவிதமான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தன. கூடவே ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களும் தாறுமாறாக குறைந்து இருக்கின்றன.
முன்பை விட குறைவு
கடந்த மார்ச் 28, 2020 முதல் அமலுக்கு வந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை விட இந்த மே 12, 2020 முதல் அமலுக்கு வரப் போகும் வட்டி விகிதங்கள் இன்னும் குறைந்து இருக்கின்றன.1 – 3 வருடங்களுக்கானFD திட்டங்களுக்கு சாதாரண மக்களுக்கான வட்டி விகித 5.7-ல் இருந்து 5.5 ஆக சரிந்து இருக்கிறது.
ஆறுதல்
அதே போல மூத்த குடிமக்களுக்கான 1 – 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.2 %-ல் இருந்து 6 %-மாக சரிந்து இருக்கிறது. ஒரே ஆறுதல் என்ன என்றால் 5 – 10 வருடங்களுக்கான மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்களுக்கு 6.2-ல் இருந்து 6.5 %-மாக வட்டி அதிகரித்து இருக்கிறது. FD வட்டி விவரங்களை கீழே முழுமையாக கொடுத்து இருக்கிறோம்.பொது மக்களுக்கான FD வட்டி
12-05-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்(2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.30%
46 days to 179 days-4.30%
180 days to 210 days-4.80%
211 days to less than 1 year-4.80%
1 year to less than 2 year-5.50%
2 years to less than 3 years-5.50%
3 years to less than 5 years-5.70%
5 years and up to 10 years-5.70%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
12-05-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.80%
46 days to 179 days-4.80%
180 days to 210 days-5.30%
211 days to less than 1 year-5.30%
1 year to less than 2 year-6.00%
2 years to less than 3 years-6.00%
3 years to less than 5 years-6.20%
5 years and up to 10 years-6.50%… என குறைத்து இருக்கிறார்கள்.