ஒரு சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட தெரிந்த நிதி சார் முதலீடு என்றால், அது வங்கிகளில் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் தான்.
இன்று வரை இந்த நம்பிக்கை மக்கள் மனதில் இருந்து அதிகம் மாறவில்லை. வங்கியை நம்பி தங்கள் கையில் இருக்கும் சொற்ப ஆயிரம் ரூபாய் முதல் லட்சக் கணக்கான ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது ஆர்பிஐ அறிவித்து இருக்கும் ரெப்போ ரேட் வட்டி விகித குறைப்பால், இந்த ஃபிக்ஸட் டெபாசிட் செய்து வைத்திருப்பவர்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஏன்?பொதுவாக, வங்கிகளிடம் மக்கள் பணத்தை டெபாசிட் செய்வார்கள். இந்த டெபாசிட் பணத்துக்கு சுமாராக 8 % வட்டி கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்...." data-gal-headline="வங்கி செயல்பாடு" data-gal-src="https://tamil.goodreturns.in/tamil.goodreturns.in/img/600x100/2013/07/27-online-tr1-600.jpg" data-pagetype="0" data-slno="1" data-url="articlecontent-pf95800-019084" id="slider0">
வங்கி செயல்பாடு
பொதுவாக, வங்கிகளிடம் மக்கள் பணத்தை டெபாசிட் செய்வார்கள். இந்த டெபாசிட் பணத்துக்கு சுமாராக 8 % வட்டி கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். வாங்கிய டெபாசிட் பணத்தை பலருக்கு சுமாராக 12 % வட்டிக்கு கடன் கொடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். 12 – 8 = 4 % தான் வங்கியின் வட்டி லாபம். இப்படித் தான் வங்கிகள் பொதுவாக இயங்கும்.
. மேலே சொன்ன உதாரணத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வழியாக 8% வட்டி..." data-gal-headline="கடன் கொடுக்க பணம் தேவை" data-gal-src="https://tamil.goodreturns.in/tamil.goodreturns.in/img/600x100/2017/02/2000newnote-22-1487762653.jpg" data-pagetype="0" data-slno="2" data-url="articlecontent-pf95803-019084" id="slider1">
கடன் கொடுக்க பணம் தேவை
எந்த ஒரு வங்கியாக இருந்தாலும், செயல்பட வேண்டும் என்றால், கடன் கொடுக்க பணம் தேவை. மேலே சொன்ன உதாரணத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வழியாக 8% வட்டிக்கு பணத்தை திரட்டி 12% வட்டிக்கு கடன் கொடுத்து வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனால் வெறும் 4.0% வட்டிக்கு பணம் கிடைத்தால், வங்கி என்ன செய்வார்கள்? வங்கிகள் 4.0% வட்டிக்குத் தானே பணத்தை வாங்க முயற்சிப்பார்கள்..? அது தான் இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறது.
ரெப்போ ரேட் தான் காரணம்
பொதுவாக ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கும் கடனுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வட்டியாக வசூலிக்கும். அந்த வட்டியின் பெயர் தான் ரெப்போ ரேட். இப்போது ரெப்போ ரேட்டை 4.4%-ல் இருந்து 4.0%-மாக குறைத்து இருக்கிறது ஆர்பிஐ. ஆக இனி வங்கிகளுக்கு 4% வட்டிக்கே பணம் கிடைக்கும்.
டெபாசிட் வட்டி குறையும்
எனவே, அதிக வட்டி கொடுத்து மக்களிடம் இருந்து ஃபிக்ஸட் டெபாசிட்டை வாங்க, வங்கிகள் அதிகம் விருப்பம் காட்டமாட்டார்கள். ஆகையால் மக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் பணத்துக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் வட்டி விகிதங்கள் மேலும் குறையலாம்.
உதாரணம் எஸ்பிஐ
கடந்த மே 2019-ல் எஸ்பிஐ 1 – 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.0% வட்டி கொடுத்தது. மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி கொடுத்தார்கள்.
ஆனால் இன்று அதே 1 – 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கு 6.0 % வட்டி கொடுத்தார்கள்.
ஆக இந்த ஒரு வருட கேப்பில் 1.5 % வட்டி குறைந்து இருக்கிறது. சரி அதே ஒரு வருட கேப்பில் ரெப்போ ரேட் எவ்வளவு குறைந்து இருக்கிறது?
ரெப்போ ரேட் வரலாறு
கடந்த ஏப்ரல் 2019-ல் ஆர்பிஐயின் ரெப்போ ரேட் 6.0%-மாக இருந்தது. கடந்த 2020 மார்ச் 27-ல் 4.4%-ஆக இருந்தது. ஆக ரெப்போ ரேட் 1.6 % சரிந்து இருக்கிறது. இது FD வட்டி விகிதங்கள் 1.5% சரிவுக்கு நெருக்கமாக இருக்கிறது.
சமீபத்தைய குறைப்பு
இப்போது 22 மே 2020 அன்று, மீண்டும் ஆர்பிஐ, ரெப்போ ரேட்டை 4.0%-மாக குறைத்து இருக்கிறது.
இதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை இதுவரை வங்கிகள் குறைக்கவில்லை. எனவே அடுத்து வரும் வாரங்களில், எஸ்பிஐ முதல் பல வங்கிகள், தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைக் மேலும் குறைக்கலாம். இப்போதே மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். சரி… இப்போது எஸ்பிஐ, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
பொது மக்களுக்கான FD வட்டி
12-05-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்)
.
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.30%
46 days to 179 days-4.30%
180 days to 210 days-4.80%
211 days to less than 1 year-4.80%
1 year to less than 2 year-5.50%
2 years to less than 3 years-5.50%
3 years to less than 5 years-5.70%
5 years and up to 10 years-5.70%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
12-05-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.80%
46 days to 179 days-4.80%
180 days to 210 days-5.30%
211 days to less than 1 year-5.30%
1 year to less than 2 year-6.00%
2 years to less than 3 years-6.00%
3 years to less than 5 years-6.20%
5 years and up to 10 years-6.50%. என கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் இன்னும் குறையலாம்.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai , kalvoupdate,& job updates
No comments:
Post a Comment