மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ : மாணவர்களின் சந்தேகங்களும் கல்வியாளர்களின் விளக்கங்களும் - ஆசிரியர் மலர்

Latest

 




10/05/2020

மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ : மாணவர்களின் சந்தேகங்களும் கல்வியாளர்களின் விளக்கங்களும்


நேற்றும் இன்றும்’ மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ’ நடந்தது. அதியொட்டி நடத்தப்பட்ட வெபினாரில் பிரபல கல்வியாளர்களும் தன்னம்பிக்கை பேச்சாளர்களும் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள்.
ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் இந்த வெபினாரில் கலந்துகொண்டனர். படிப்பையும் கல்லூரியையும் எப்படித் தேர்வு செய்வது, நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல தகவல்களை கல்வியாளர்கள் வழங்கினர். இறுதி நாளான இன்று, காலை மற்றும் பிற்பகல் இருவேளையிலும் கல்வியாளர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.

ஸ்பான்சர்ஸ்

எம். ரமேஷ் பிரபா தலைவர், கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
” ‘Cyber Security’ சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாமா? அந்த படிப்புக்கான எதிர்காலம் என்ன?”
” Cyber Security, Nano Technology, Robotics போன்ற படிப்புகள் பற்றி தற்போது நிறைய மாணவர்கள் சிந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இளங்கலைப் படிப்பில் ( Under graduate- ல்) ECE , Computer Science போன்ற பிரிவுகளில் படித்துவிட்டு ப்ராஜெக்டின்போது Specialise பண்ணவேண்டும். அதேபோலதான் Robotics படிப்பும். Mechanical போன்ற பிரிவுகளில் இளங்கலைப் படிப்பு படித்த பிறகு முதுகலைப் படிப்பாகவும் (Post Graduate), Research ஆகவும் அதைப் படிக்கலாம்
. +2 முடித்துள்ள இன்றைய சூழலில் நீங்கள் இதைப்பற்றி பேசுவதைவிட , கல்லூரி 2- ஆம் ஆண்டு , 3 -ஆம் ஆண்டு படிக்கையில் இதைப் பற்றி பேசுவது சிறப்பான ஒன்றாக அமையும்.”
” ‘Certificate Courses’ படிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமா?”
“பொருளாதார சூழல் சிரமமாக உள்ளவர்கள் மேற்கொண்டு ஒரு டிகிரி படிப்பதைவிட, உடனடியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் இருப்பார்கள். அந்த சூழலில் உள்ளவர்களுக்கு நான் ‘Certificate Courses’ -ஐ பரிந்துரைப்பேன். மற்றவர்கள் தாங்கள் படிக்கும் டிகிரிக்கு ஏற்ற Certificate Courses படிப்பது நல்லது. “

ரமேஷ்பிரபா

”’Food Technology’, ‘Printing Technology’ போன்ற படிப்புகளைத் தேர்வு செய்யலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?”
” ‘ Food Technology ‘ நிறைய கல்லூரிகளில் இருக்கக்கூடிய துறை. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் நீங்கள் அதைத் தேர்வு செய்யலாம். Food Processing துறை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கக்கூடிய துறை. அதில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. நீங்கள் தனியாக தொழில் தொடங்குவதங்கும் இதில் வாய்ப்புண்டு. ‘Printing Technology’ – யும் அப்படிதான். இன்றைக்கு பெரியஅளவில் வளர்ந்து நிற்கிறது. இன்று 3D பிரிண்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இதிலும் சொந்தமாகத் தொழில்தொடங்க நிறைய வாய்ப்புகள் உண்டு. Petro chemical Engineering, Chemical Engineering போன்ற நிறைய படிப்புகள் உள்ளன. பல மாணவர்களும் ஒரே துறையையே தேர்வு செய்கிறார்கள். அதைத் தவிர்த்து இதுபோல ‘Specialized Courses’ – ஐத் துணிந்து தேர்வு செய்யலாம். “
”’Bio- Medical Engineering’ , ‘Bio- Technology’ இரண்டு துறைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?”
“+2 வில் Bio- Maths பிரிவில் படிப்பவர்கள் அதிகம்.
அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினீயரிங் துறைக்குச் செல்வார்கள். சிலர் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பார்கள். இன்ஜினீயரிங் – ஐத் தேர்வு செய்தவர்கள் Biology பாடத்தை விரும்புபவர்களாக இருந்தால் அவர்களுக்கென உள்ள துறைகள்தாம் Bio- Medical, Bio- Technology, Bio- Informatics . இந்தத் துறைகளை தைரியமாகத் தேர்வு செய்யலாம். Bio- Medical என்பது நாம் கார்பரேட் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அங்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மருத்துவக் கருவிகள் இருக்கும். அந்தக் கருவிகளை இயங்குவது இன்ஜினீயரிங் தத்துவம். ஆனால், அதன் பயன்பாடு மருத்துவம் சார்ந்தது. மருத்துவமும், இன்ஜினீயரிங்கும் கலந்து ஒருதுறை அது. Bio- Medical Equipments தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. Bio- Technology என்பது உயிரியல் தொழில்நுட்ப படிப்பு. ஒரு செடியின் தன்மையை ஆராய்ந்து அதன் தேவைக்கேற்ப அதைப் பல ஆயிரம் செடிகளாக மாற்றும் தொழில்நுட்பம் Bio- Technology. இந்த இரண்டு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. “
முனைவர் D.வாசுதேவன், முதல்வர், பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
”’Genetic Engineering’ போன்ற எதிர்காலத்துக்கான படிப்புகளாகச் சொல்லப்படும் இன்ஜினீயரிங் பிரிவுகளுக்கு எத்தகைய வேலைவாய்ப்புகள் உள்ளன?”
” இந்திய தொழில்நுட்பக் கழகம், Artificial Intelligence , 3D printing போன்ற சில படிப்புகளை எதிர்காலத்துக்கான படிப்புகளாகத் தெரிவிக்கின்றன.
இனிவரும் 10 ஆண்டுகளில் அதிக தொழில் வாய்ப்புள்ள படிப்புகளாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றன. அதில் ‘Artificial Intelligence’ மற்றும் ‘Data Science’ … இரண்டு படிப்புகளை மட்டும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி தனியாக B.E படிப்பில் ஒரு பிரிவாக வைக்கலாம் என முடிவுசெய்து துறையாக்கி உள்ளது. ‘Robotics’, ‘Genetics’ போன்றவை பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ‘Genetic Engineering’- க்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவு. “

முனைவர் D.வாசுதேவன்

”இன்ஜினீயரிங்கைப் பொறுத்தவரை ‘Post Graduate’- ன் முக்கியத்துவம் என்ன?”
“சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ போன்ற முதன்மை கோர்ஸ்கள் சிலவற்றில் எவ்வித தயக்கமும் இன்றி நாம் ‘Post Graduate’ படிக்கலாம். அதுவும் பலருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்கள் Phd படிக்க விரும்புவர். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இன்ஜினியரிங் கல்லூரிக்கான பேராசிரியர் பணிவாய்ப்புகள் உள்ளன.
வெளிநாடுகளிலும் உள்ளன. ‘Research and Development’ க்காகவும், கல்லூரி பேராசிரியராவதற்கும் ‘Post Graduate’ அவசியமான ஒன்று. “
டாக்டர் சங்கர் வேணுகோபால் துணைத் தலைவர்- டெக்னாலஜி இன்னோவேஷன் பிரிவு, மஹிந்திரா & மஹிந்திரா

டாக்டர் சங்கர் வேணுகோபால்

”கல்லூரி மாணவர்கள் ‘ப்ராஜெக்ட்’ துவங்கி புதுமையான விஷயங்களைத் தேர்வுசெய்து அணுகுவது எப்படி?”
” எப்போதுமே நாம் ஒரு திட்டத்தைத் துவங்கும்போது 10 விதமான யோசனைகளை, முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதில் 8 யோசனைகள் கைகொடுக்காமல் போகலாம். தோல்வி அடையலாம். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. 10 வது யோசனையும், முயற்சியும் கைகொடுக்கும். ‘ப்ராஜெக்ட்’ – ஐத் துவங்கும்முன் அந்த யோசனையைப் பல கோணங்களில் சிந்தியுங்கள். அதற்கான வாய்ப்புகளை ஆழமாக யோசியுங்கள். அதைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கு குறிப்பிட்ட காலம் ஒதுக்கவேண்டும். ஐடியா எப்படி வொர்க் ஆகும் என்ற திட்டமிடல் வேண்டும். Creative, non – creative என்பதல்ல விஷயம். Confident about the Creative idea என்பதுதான் அவசியம். “
M.தவமணி கிறிஸ்டோபர், முதல்வர் மற்றும் செயலர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

M.தவமணி கிறிஸ்டோபர்

”இன்ஜினீயரிங்கில் ‘Advanced Courses’ என சில உண்டு. அதேபோல கலை , அறிவியல் துறையில் அடுத்த 10 வருடங்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள் என்னென்ன?”
” நிறைய உள்ளன. அவற்றில் 3 முக்கிய படிப்புகளைப் பார்ப்போம். ஒன்று ‘Data Science’. இந்தத் துறை இன்னும் பல மாணவர்களால் எடுக்கப்படவில்லை. ‘Google’, ‘Microsoft’, போன்ற பெருநிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருக்கக்கூடிய ஒரு படிப்பு. திறமையை வளர்த்துக்கொண்டால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள படிப்பு. அடுத்தது ‘Micro- Biology’ வரும்காலங்களில் இந்த படிப்புக்கு மிகப்பெரிய எதிர்காலமிருக்கும். அடுத்தது ‘Food Science’, ‘Visual Communication’ இந்த இரண்டு துறையும் தற்போது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய துறையாக உள்ளது. “
டாக்டர் E.N.கணேஷ் டீன், ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ் ஸ்டெடீஸ்

டாக்டர் E.N.கணேஷ்

”மாணவர்கள் தங்களுக்கான துறை இதுதான் என எப்படித் தெரிந்துகொள்வது?
பொதுவாகவே மாணவர்கள் +1 மற்றும் +2 வில் தங்களுக்கான குரூப்பைத் தேர்வுசெய்வர்.
அந்தத் தருணத்திலேயே அவர்கள் என்ன படிக்கப் போகிறார்கள் என்பதையும் யோசித்துவிடுவது நல்லது. முதலில் அவர்களுக்கு எந்த படிப்பு பொருத்தமானது என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இன்ஜினீயரிங் படிக்கப்போகிறோம் என்றால் எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய சில வழிகள் உண்டு.
1. நீங்கள் ’Advanced Courses’- ஐத் தேர்வு செய்யப் போகிறீர்களா, இல்லை ‘Core Courses’ தேர்வு செய்யப் போகிறீர்களா என்பது அவசியம்.
2.அதை அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், சீனியர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்கிறோம் என்பதையும் சேர்த்து ஆலோசிக்க வேண்டும்
3. Course க்கான ‘Opportunity ‘என்ன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் . அதற்கான முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னரே படிப்பைத் தேர்வு செய்யவேண்டும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459