கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?' - ஆசிரியர் மலர்

Latest

09/05/2020

கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?'


அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப் பதற்றமே விலகவில்லை. அடுத்து என்ன படிப்பது, கல்லூரிகளை எப்படித் தேர்வு செய்வது என்று பல குழப்பங்கள்… பதற்றங்கள். கொரோனாவால் நாடே முடங்கியிருக்கிறது. இந்தச்சூழலில் இந்தக் குழப்பங்களை எப்படித் தீர்த்துக்கொள்வது?
ஆனந்த விகடன் அதற்காக செய்திருக்கிற ஏற்பாடுதான், `டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ’. இந்தக் கண்காட்சியை ஒட்டி பிரபல கல்வியாளர்கள்,
தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்கும் வெபினாரையும் ஏற்பாடு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.


விகடன் கல்வி எக்ஸ்போ

மே 9 மற்றும் 10-ம் தேதி நடக்கவுள்ள இந்த வெபினாரில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று கல்வியாளர்களோடும் தன்னம்பிக்கை பேச்சாளர்களோடும் உரையாடலாம். மே 10-ம் தேதி, `பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்’ என்ற தலைப்பில் `பட்டிமன்றம்’ ராஜா மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் உரையாடுகிறார். மாணவப் பருவத்தில் குடும்பத்தைப் பற்றியோ, தேசத்தைப் பற்றியோ, பெரிய அளவிலான யோசனைகள் நம்மிடம் இருக்காது.
“வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்… கல்வியோடு அதை எவ்வாறு அவர்கள் அணுக வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசவிருக்கிறேன்.
குறிப்பாக குடும்பத்தையும், நமது தேசத்தையும் பற்றி தெரிந்துகொள்வதற்கு, இந்த மூன்று மாதங்கள் போதும். இதில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவற்றை நமது வாழ்வின் முன்னேற்றங்களுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பேசுகிறேன்.


விகடன் கல்வி எக்ஸ்போ

மாணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்கிறார் ராஜா. `பட்டிமன்றம்’ ராஜா நாடறிந்த பேச்சாளர். மதுரையில் பிறந்த இவர், இதழியல் படிப்பில் பட்டம் பெற்றவர். யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். `சிவாஜி’, `கோ’, `மாப்பிள்ளை’, `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை, 7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் ராஜா தீவிரமான வாசிப்பாளரும்கூட. அவருடன் உரையாடக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மாணவர்களே! இந்த நிகழ்வில் உங்களுடைய பங்கேற்பை உறுதி செய்ய இங்கே உள்ள Click here to join
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459