நண்பன்\" சீனாவுடன் முதல்முறை மோதும் ரஷ்யா.. டிரம்புடன் நெருக்கமான புடின்.. உலக அரசியலில் திருப்பம்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நண்பன்\" சீனாவுடன் முதல்முறை மோதும் ரஷ்யா.. டிரம்புடன் நெருக்கமான புடின்.. உலக அரசியலில் திருப்பம்!


மாஸ்கோ: கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. முதலில் மெதுவாக உயர்ந்த கேஸ்கள் தற்போது வேகமாக தினமும் 10 ஆயிரம் என்ற வீதத்தில் பரவ தொடங்கி உள்ளது. அங்கு 2,90,678 கொரோனா கேஸ்கள் உள்ளது. உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்கு 2722 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நட்பு இருந்ததுஆனால் கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் சீனாவை உலக நாடுகள் எதிர்த்தது போல ரஷ்யா எதிர்க்கவில்லை. ரஷ்யா தொடர்ந்து சீனாவிற்கு தனது ஆதரவை அளித்து வந்தது. அதிலும் கொரோனா குறித்து ரஷ்யா எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று கூறி வந்தது. ஆனால் ரஷ்யா அதை கவனத்தில் கொள்ளவில்லை. ரஷ்யா - சீனா உடனான நட்பு எப்போதும் போல இருந்தது.உதவி செய்ததுஅதேபோல் சீனா மீது வைக்கப்பட்ட புகார்களையும் ரஷ்யா எதிர்த்தது
. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானது என்ற வாதத்தை ரஷ்யா ஏற்கவில்லை. அமெரிக்கா கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த புகாரை உலக நாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவும் கூட ஏற்கும் நிலையில் உள்ளது . ஆனால் ரஷ்யா இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை . அதோடு சீனாவும் ரஷ்யாவிற்கு மருத்துவ ரீதியான உதவிகள் செய்து வந்தது. தனது மருத்துவ குழுவை சீனா ரஷ்யாவிற்கு அனுப்பியது.திடீர் விரிசல்நிலைமை இப்படி இருக்க இரண்டு கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டின் உறவிலும் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதற்கு முதல் காரணம் சீனாதான். ரஷ்யா கடந்த மாதம் சீனா அருகே இருக்கும் தனது எல்லைகளை மூடியது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ரஷ்யா தனது எல்லையை மூடியது . இதை சீனா கடுமையாக கண்டித்த காரணத்தால் இரண்டு நாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டது.மோதல் காரணம்சீனாவிற்கு அருகே இருக்கும் எல்லைகளை ரஷ்யா முடியதை ஏற்க முடியாது. ரஷ்யா எங்களிடம் அறிவிக்காமல் எல்லையை முடியதை ஏற்க முடியாது என்று சீனா கூறியது. இது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வார்த்தை போராக மாறியது. அதன்பின் இரண்டாவதாக, ரஷ்யாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அங்கு 8 நாட்களில் 1 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது. உலகில் இரண்டாவது பெரிய கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.அதிக கேஸ்கள்இதனால் மக்கள் சீனா மீது கோபம் கொண்டனர்
. இப்படி அதிகரிக்கும் கேஸ்களாக சீனாவை கண்டிப்பாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா சென்றுள்ளது. அதேபோல் ஊரடங்கு காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சீனா தொடர்ந்து ஏற்றுமதியை செய்து வருகிறது. ரஷ்யாவிற்கு இது ஒரு வகையில் கோபத்தை உண்டாக்கி உள்ளதால் சீனா மீது ரஷ்யா கோபத்தில் உள்ளது. அதேபோல் அந்நாட்டு அதிபர் புடினுக்கும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் உள்ளது.புடின் என்ன சொன்னார்கொரோனா வைரஸை சரியாக கட்டுப்படுத்தவில்லை, அதிபர் தலைமறைவாகிவிட்டார் என்று புடின் மீது புகார் இருக்கிறது. இதனால் தனக்கு வைக்கப்படும் அரசியல் ரீதியான அழுத்தத்திற்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று புடின் நினைக்கிறார். இதற்கு சீனாதான் காரணம் என்ற கோபத்தில் அவர் இருக்கிறார்.
இதுவும் கூட சீனா - ரஷ்யா இடையே சண்டை வர காரணம் ஆகும். அதேபோல் இன்னொரு பக்கம் ரஷ்யா - அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர தொடங்கி உள்ளது.அமெரிக்கா உறவுரஷ்யாவுடன் அமெரிக்கா ஒன்றாக சேர்ந்து பணியாற்றும் என்று இரண்டு நாடுகளும் உறுதி பூண்டு இருக்கிறது. இதற்காக இரண்டு நாடுகளும் அறிக்கை வெளியிட்டனர். பல வருட எதிரிகள் இப்போது ஒன்றாகி உள்ளனர். கொரோனாவை ஒன்றாக எதிர்ப்போம் என்று இரண்டு பேரும் கூறியுள்ளனர். இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது
. உலக அளவில் சீனா தனக்கு நண்பன் இல்லாத நிலையை அடைந்துள்ளது.ஒன்றாக பேசினார்கள்அதிபர் டிரம்பும், அதிபர் புடினும் இதற்காக தொலைபேசி வழியாக பேசிக்கொண்டனர். இருவரும் நெருக்கம் ஆகியுள்ளனர். அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கம் காட்டுவது சீனாவுடனான அதன் உறவை முறிக்க தொடங்கி உள்ளது. பல வருடங்களாக நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்த ரஷ்யா - சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல்.. இன்னும் பெரிதாகும் என்று கூறுகிறார்கள்.