ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளை பல வங்கிகள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை - ஆசிரியர் மலர்

Latest

24/05/2020

ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளை பல வங்கிகள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை

கோவை:”ரிசர்வ் வங்கியின் அறிவித்த சலுகைகளை, பல வங்கிகள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. வட்டி விகிதங்களையயும் குறைக்கவில்லை,” என, தென்னிந்திய மில்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன் கூறியதாவது:கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசத்தை, ரிசர்வ் வங்கி வரும் ஆகஸ்ட் 31 வரை நீடித்துள்ளது, ஜவுளித்தொழிலுக்கு கிடைத்த ஒரு நிவாரணம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ‘ஆத்மா நிர்பர் பாரத் அபியான்’ பெரிதும் பயனுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அல்லாத தொழில் நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகள் மிகவும் முக்கியமானவை.
பல நாடுகளில் ஊரடங்கால், வரும் ஆண்டில், உலக அளவிலான ஜவுளி தேவை, 30 முதல் 40 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஜவுளித் தொழிலிலும், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கவும் வாய்ப்புகள் உள்ளன.மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ள சலுகைகள், மீண்டும் தொழிலை நிலைநிறுத்த உதவும். ரிசர்வ் வங்கி, மார்ச் 27ல் அறிவித்த சலுகைகளும், தற்போது அறிவித்துள்ள கடன் தவணை கால அவகாச நீட்டிப்பையும் பல வங்கிகள் அமல்படுத்தவில்லை. சலுகைகள் அறிவித்தும், தொழில் நிறுவனங்களுக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக வங்கிகள் அமல்படுத்த நடவடிக்கை தேவை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459