கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா - ஆசிரியர் மலர்

Latest

 




16/05/2020

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா


புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்புள்ள நாடுகளில் 11வது இடம் பிடித்தது.
சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது கொரோனா. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது
. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனர். அதே சமயம், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை மே 17ம் தேதிக்கும் பின், 4வது முறையாகவும் நீட்டிக்க உள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இன்று(மே 15) மாலை 4.02 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 546ஆக உயர்ந்தது. உயிர் பலியும் 100ஐ நெருங்குகிறது.
இதுவரை 97 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது.
உலகில் இதுவரை 213 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசுக்கு, 45.80 லட்சத்துக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459