இதுவரை நாம் விவசாயிகளின் தற்கொலைகளைத்தான் கண்டிருக்கிறோம். இனி அதே விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பார்கள். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இதுவரை நாம் விவசாயிகளின் தற்கொலைகளைத்தான் கண்டிருக்கிறோம். இனி அதே விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.


ஆந்திரா, யாதாத்ரி – புவனகிரி மாவட்டத்தில் வறட்சி தொடர்பான அரசாங்க திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் சென்று வருகிறார் சிரஞ்சீவி. குடும்பத்தை கவனிப்பதற்கு வேறுவழியின்றி அவரின் மனைவி பத்மாவும் அவருடன் இணைந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள சிரஞ்சீவி, “இதுவரை நாம் விவசாயிகளின் தற்கொலைகளைத்தான் கண்டிருக்கிறோம். இனி அதே விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிரமத்தில் இருக்கின்றனர். இதில் பலருக்கு ஏப்ரல் மாதச் சம்பளமே இன்னும் வரவில்லை. அக்டோபர் மாதம் வரை நிலையான சம்பளம் இருக்காது என்ற அச்சம் இருக்கிறது.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ரேஷன் பொருள்களும் 1,500 ரூபாய் நிவாரணமும் கிடைக்காது” என்றார்.

No comments:

Post a comment