முகத்தில் படர்ந்த கருமையை போக்க உதவும் கசாயம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முகத்தில் படர்ந்த கருமையை போக்க உதவும் கசாயம்


முகத்தில் படர்ந்த கருமை நிறமும். உடலின் நிறமும் மாற வேண்டுமா? இந்த கசாயத்தைத் தினமும் குடித்துவாருங்கள். 
ஆவாரம் பூ  நன்னாரி வேர் கசாயம்
தேவையான பொருட்கள்
நன்னாரி வேர்.      –   5  கிராம்
ஆவாரம் பூ.             –   10 கிராம்
ஆலம் பட்டை.         –    5  கிராம்
                                   
செய்முறை
முதலில் நன்னாரி வேர், ஆவாரம் பூ, ஆலம் பட்டை இவை மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 100 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி   வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் முகத்தில் படர்ந்த கருமை நிறத்தை  மாற்றக் கூடிய அருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும்
வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறமும் மாறும். உடலின் நிறமும் மாறும்.

இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.