உலக நாடுகள் தென்கொரியாவை பின்பற்றுங்கள்ஐ.நா சபை பொதுச்செயலர் பாராட்டு - ஆசிரியர் மலர்

Latest

02/05/2020

உலக நாடுகள் தென்கொரியாவை பின்பற்றுங்கள்ஐ.நா சபை பொதுச்செயலர் பாராட்டு



ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்: கோப்புப்படம் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தென் கொரியா எவ்வாறு வெற்றிகரமாக செயல்பட்டது என்பதை முன் உதாரணமாக வைத்து அந்த நாட்டை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவிலும், தென் கொரியாவிலும் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஒரே நாளில்தான் கரோனா வைரஸால் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால், தென்கொரியா தனது தீவிரமான பரிசோதனைகள், சமூக விலகல்கள், மருத்துவசிகிச்சை மூலம் கரோனாவை கட்டுப்படுத்தி ஏறக்குறைய கரோனா நோயாளிகள் இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் 11 லட்சம் நோயாளிகள் உள்ளனர், 60 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்
. உலக சுகாதார அமைப்பு கூறிய அனைத்து வழிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றிய தென் கொரியா பரிசோதனைக் கருவிகளை உள்நாட்டில் தயாரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியது. மக்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தி, கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தது
அமெரிக்காவைப் போல அல்லாமல் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதும் நாடுமுழுவதும் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, எல்லைகளை மூடியது தென் கொரியா. இதனால், சிலநாட்களில் பரிசோதனை தீவிரமாகி தென் கொரியாவில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு பரிசோனை நடத்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.



இதனால் கரோனா அறிகுறிகள் இருப்போர் விரைவாக கண்டறியப்பட்டு தொடக்க அறிகுறிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதால் எளிதில் பெருந்தொற்றிலிருந்து வெளியே வர முடிந்தது. உள்நாட்டிலேய பரிசோதனைக் கருவிகளைத் தயார் செய்து பிரசோதனை அளவை அதிகப்படுத்தியது தென் கொரியா கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல முக்கியக்காரணமாக அமைந்தது. பரிசோதனைக் கருவிகளுக்காக வெளிநாட்டின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தியது.
பரிசோதனைகளை அதிக அளவில் செய்ததால் கரோனா பாதிப்பு
மிகப்பெரிய அளவில் வராமல் தென் கொரியா தற்காத்துக்கொண்டது. இதுவரை தென் கொரியாவில் 10,765 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு, அதில் 9,059 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் தென் கொரியாவில் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சரியான திட்டமிடல், பரிசோதனைகள், சிகிச்சையளித்தலை வெற்றிகரமாகச் செய்துவரும் தென் கொரியாவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்
என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குட்டரெஸ் நேற்று காணொலி மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சரியான திட்டமிடல், மருத்துவசிகிச்சை, பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல் போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்து கட்டுப்படுத்தி வரும் தென் கொரியாவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கரோனாவிலிருந்து தங்கள் மீட்க காலநிலை மாற்றத்தையும் எவ்வாறு கையாள்கிறார்கள என்பதையும் உலக நாடுகள் பின்பற்ற வேண்டும். தென் கொரியா திட்டமிட்டு கரோனா வைரஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால்
, அங்கு புதிதாக எந்த நோயாளிகளும் உருவாகவில்லை.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பரிசோதனைகள், மருத்துவசிகிச்சை என புறம் தென் கொரியா செயல்பட்டாலும், அதிலிருந்து மீள்வதற்காக புதிதாக நிலக்கரி சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியது, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்தது, அனல்மின்சாரத்தை நிறுத்தி சூழியலை பாதுகாத்து வருகிறது. இதுபோன்ற
தென் கொரியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் புதிதாக உருவானநிலையில் அதைக் கட்டுப்படுத்தி, கடந்த சில வாரங்களாக புதிதாக நோயாளிகள் உருவாகாத சூழலைக்கொண்டு வந்தது தென் கொரியா. அடுத்துவரும் நாட்களில் தென் கொரியாவில் சூழல் இன்னும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பெரும்பாலான கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்தப்படலாம்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459