வைட்டமின்-டி சத்துக் குறைபாடுள்ளவர்களை தாக்கும் கொரோனா : சென்னையில் பலருக்கும் குறைபாடு - ஆசிரியர் மலர்

Latest

 




08/05/2020

வைட்டமின்-டி சத்துக் குறைபாடுள்ளவர்களை தாக்கும் கொரோனா : சென்னையில் பலருக்கும் குறைபாடு


வைட்டமின்-டி சத்துக் குறைபாடு கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழப்புகளைச் சந்திப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ், உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா எப்படிப்பட்டவர்களைத் தாக்குகிறது ? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டயாபெடிக்ஸ் ஸ்பெஸலிஸ்ட் சென்டர் மற்றும் பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் இதழும் இணைந்து அண்மையில் சென்னையில் ஆய்வு ஒன்றை நடத்தின. 1,500 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 66 சதவிகிதம் பேரும், பருமனான உடல் கொண்ட 80 சதவிகித பேரும் அடங்குவர்.

இது போன்றவர்களே கொரோனா தொற்றுக்கு அதிகளவில் ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேபோன்று, ஆண்களை விடப் பெண்கள் வெயிலில் செல்வது குறைவு என்பதால் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெயிலில் தினசரி சிறிது நேரம் நிற்பது மூலமே வைட்டமின் டி சத்தை பெறலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459