பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை, கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை,
தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா, பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில், வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ஸ்டாலின் ராஜா, வழக்கை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.