ஜூன்- ஜூலையில் தான் கொரோனா உச்சத்தில் இருக்கும் - எய்ம்ஸ் இயக்குநர் - ஆசிரியர் மலர்

Latest

 




07/05/2020

ஜூன்- ஜூலையில் தான் கொரோனா உச்சத்தில் இருக்கும் - எய்ம்ஸ் இயக்குநர்


புதுடில்லி: ஜூன்- ஜூலையில் தான் கொரோனா உச்சத்தில் இருக்கும் என டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தரவுகள் மற்றும் பாதிப்புகள் அதிகரிப்பு அடிப்படையில் ஜூன் – ஜூலை மாதத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சமடையும். ஊரடங்கு மற்றும் அதனை நீட்டிக்கப்பட்டதன் பலன் தெரியவரும் . இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். 15,266 பேர் குணமடைந்த நிலையில், 35,902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459