ஊதியக் குறைப்பு : காத்திருப்பு போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




31/05/2020

ஊதியக் குறைப்பு : காத்திருப்பு போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்



சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். ஊதியம் குறைக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் அரசு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி மண்டலத்திற்குட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 11 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஊரடங்கால் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் ஊரடங்கால் விடுமுறை விடப்பட்ட நாட்களை, ஊழியர்களுக்கான விடுப்புகளை கழித்துவிட்டனர். மேலும் விடுப்பு இல்லாதவர்களுக்கு ஊதியத்தை குறைத்துவிட்டனர். இதை கண்டித்து இன்று சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கும் 100 சதவீத ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் விடுப்பை கழிக்க கூடாது என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

இதில் அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்றனர். இதேபோல் மற்ற பணிமனைகளிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பிரச்சினையை அரசு தீர்க்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459