ரயில்கள் முன்பதிவு நாளை முதல் தொடக்கம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ரயில்கள் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்


ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் 200 ஏசி அல்லாத ரயில்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இதற்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இணையதளம் வழியாக மட்டுமே ரயில் முன்பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment