கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும் - சுகாதாரத்துறை இணை செயலர் - ஆசிரியர் மலர்

Latest

09/05/2020

கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும் - சுகாதாரத்துறை இணை செயலர்


கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். 
கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை 3வது முறையாக
மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சில தளர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,273 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது வரை 16,540 பேர் குணமடைந்துள்ளனர். 37,916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறுகையில்;-கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகி கொள்ள வேண்டும். அனைத்து நடைமுறைகளையும், பழக்க வழக்கத்தில் மாற்றத்திற்கு போல் ஏற்க வேண்டும். இந்த சவால் பெரியது. அதற்கு அனைவரின் ஆதரவு தேவைப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை தினசரி போருக்கு ஒப்பானது. ஒரு நாளில் ஏற்படும் தோல்வி ஒட்டு மொத்த முயற்சிகளையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459