கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணை தொகை செலுத்த அவகாசம் நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணை தொகை செலுத்த அவகாசம் நீட்டிப்பு

சென்னை : கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான ஜூன் வரை வழங்கிய அவகாசம் செப்டம்பர் வரைநீட்டிக்கப்பட உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவை பயிர் கடன், சிறு வணிக கடன், தங்க அடமான கடன் போன்ற பிரிவுகளில் கடன்கள் வழங்குகின்றன.ஊரடங்கால்கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்றவர்கள் தவணை தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை மூன்று மாதங்கள் அதாவது ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு மார்ச் 31ல் உத்தரவிட்டது.விவசாயிகள் தவணை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கு பதில் மூன்று மாத தவணை தொகையை தள்ளுபடி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் கூட்டுறவுவங்கிகளில் பயிர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணை தொகை செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகளுக்கு கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதை பின்பற்றி தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் தவணை தொகை செலுத்த ஜூன் வரை வழங்கிய அவகாசத்தை செப். வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழகஅரசு விரைவில் வெளியிடும்.இவ்வாறு கூறினார்

No comments:

Post a comment