இனி வங்கிகளில் பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இனி வங்கிகளில் பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறை


இந்தியாவில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக  வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறைகளை வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நபர்களின் கணக்கில் பூஜ்யம் அல்லது 1 ஆகிய எண்களை கடைசி எண்ணாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 4ஆம் தேதி பணம் எடுக்கலாம்.
இதேபோல் கடைசி எண் 2 அல்லது 3 வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 5ம் தேதியும், 4 அல்லது 5 எண் கடைசி எண்ணாக கொண்ட வாடிக்கையாளர்கள் மே 6ம் தேதியும் பணம் எடுக்கலாம்.
இதேபோன்று கடைசி எண் 6 அல்லது 7 கொண்டோர் மே 8ம் தேதியும், 8 அல்லது 9 கொண்டவர்கள் 11ஆம் தேதியும் பணம் பெறமுடியும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற மே 11 வரை அமலில் இருக்கும்.
மே 11க்குப் பின்னர் எந்த வாடிக்கையாளரும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என அனைத்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது