சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் - ஆசிரியர் மலர்

Latest

 




01/05/2020

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம்


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 
இந்நிலையில், சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோரும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459