பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




15/05/2020

பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 
அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் வளமான அளவில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்தசோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக்கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்கமாட்டீர்கள்.
கலோரி குறைவானது
பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
அதிகப்படியான வைட்டமின்கள் நிறைந்தது:
கொண்டது பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகளதன சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்தது:
தினமும் ஒரு கப் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்:
பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்:
பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
இரத்த அழுத்தம்:
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஆரோக்கியமான இதயம்:
ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்:
பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்
அழகான சருமம்:
பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
ve="true"> பார்வைக் கோளாறைத் தடுக்கிறது: பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ்:
ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் கே வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியோகால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.
மூட்டுவலி/ஆர்த்ரிடிஸ்:
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.
இரத்த சோகை:
பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
மலச்சிக்கல்:
தினமும் ஒரு சிறிய கப் அல்லது ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரையை உணவோடு சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் மிக எளிதில் மலச்சிக்கலில் இருந்து விடுபட முடியும். ஏனென்றால் இதில் நார்ச்சத்து மிக அதிகம்
ve="true"> . இது ஜீரண மண்டலத்தினுடைய செயல்பாடுகளை முறைப்படுத்தி, செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க உதவி செய்யும்.
தோல் நோய்கள் பித்தம், நீர்த்தாரை, வெட்டை நோய்கள், மேகநோய் போன்ற தோல் நோய்களைக் குறைக்கும் வேலையை இந்த பசலைக்கீரை செய்கிறது.
குழந்தைகளுக்கு:
இந்த பசலைக்கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சாறெடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு இருக்கின்ற நீர்க்கோர்வை கூட சரியாகிவிடும்.
விந்து கெட்டிப்பட:
விந்து நீர்த்துப் போகிறது, உங்களுக்குத் தெரியாமலேயே தூக்கத்தில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் தினமும் பச்லைக்கீரை சாறினை எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தாது கெட்டிப்படும்.
தலைவலி
இந்த பசலைக்கீரை இலைகளை நெருப்பில் லேசாக வாட்டி எடுத்து தலைக்குப் பற்று போட்டால், தலைவலி சரியாகும். மூளைக்கும் ஆற்றல் பெருகும்.
ve="true"> கர்ப்பிணிகள்:
கருவுற்றிருக்கக் கூடிய பெண்களுக்கும் குழந்தை பிறந்து குழந்தைக்குப் பாலூட்டுகின்ற பெண்களுக்கும் இந்த பசலைக்கீரை மிகச்சிறந்த உணவாக அமையும். இதிலிலுள்ள ஃபோலிக் அமிலம் பெண்களுக்கு ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும்.
எடையைக் குறைக்க:
உடல் பருமனால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் இந்த பசலைக்கீரையை டயட்டில் சேர்த்து வந்தால், மிக வேகமாகப் பலன் கிடைக்கும். பொதுவாகவே பசலைக்கீரையில் கார்போஹைட்ரேட் அளவும் கலோரி அளவும் மிகக் குறைவு என்பதனால் நிச்சயம் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
எப்படி சாப்பிடலாம்? 
இதை மற்ற கீரைகளைப் போல கடையல் அல்லது பொரியலோ செய்து தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது
ve="true"> . நாம் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்துவது போல பொடியாக நறுக்கி, சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம். இலைகளை பொரியல், கடையல், துவையல் என செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரையைப் போன்று சூப் செய்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த சூப் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவை எல்லாவற்றையும் விட, இந்த இலைகளைச் சாறெடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் குடித்துவரலாம்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459