தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் - ஆசிரியர் மலர்

Latest

04/05/2020

தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்


தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என  ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு சென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன. 
அறிகுறி இல்லாமலேயே பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். அதிகளவில் சோதனைகள் எடுக்கப்படுவதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது.
முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. 
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து பயப்பட தேவையில்லை. கோயம்பேடு பகுதியில் மானிட பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை ஒரு விழுக்காடுதான் உள்ளது. தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் பரிசோதனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. அனைத்து வகையான மருத்துவ முறையிலும் கொரோனாவுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறோம். சென்னையில் நாள் ஒன்று 3,600 பேருக்கு சோதனைகள் எடுக்கப்படுகின்றன. வீட்டுக்கு வீடு சோதனை வேகம் குறைந்துள்ளது. அதைசரி செய்வோம் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459