கொரோனா ரெட் ஜோன் எத்தனை? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 1 May 2020

கொரோனா ரெட் ஜோன் எத்தனை?


புதுடில்லி: இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த அனைத்து மெட்ரோ நகரங்களும் ‘ரெட் ஜோன்’ ( சிவப்பு மண்டலங்களாக ) அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 12 மாவட்டங்கள் இந்த ‘ரெட் ஜோன் ‘ பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் முதல் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் துவங்கி இன்று நாடு முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,147 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் துவங்கிய ஊரடங்கு இன்னும் நீடித்து வருகிறது. வரும் மே 3ம் தேதிக்கு பின்னர் தளர்வுகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பலரும் பணிக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சமாளிக்க முடியாத நிலையில் வறுமையில் வாடும் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று மத்திய கேபினட் செயலர், மாநில தலைமை செயலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சுகாதார துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் நாடு முழுவதும் ரெட், ஆரஞ்ச், கிரீன் என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட மாவட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 130 மாவட்டங்கள், ‘ ரெட் ஜோன் ‘ ஆகவும், 284 மாவட்டங்கள் ‘ ஆரஞ்ச் ஜோன் ‘ ஆகவும், 319 மாவட்டங்கள் ‘ கிரீன் ஜோன் ‘ ஆகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்களும், மகாராஷ்ட்டிராவில் 14 மாவட்டங்களும்,
உத்தரபிரதேசத்தில் 19 மாவட்டங்களும், மேற்கு வங்கத்தில் 10 மாவட்டங்களும் அடங்கும்.
இது போல் நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு ,சென்னை, கொச்சி, ஆமதாபாத், ஆகியன முழுவதும் ‘ ரெட் ஜோன் ‘ களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ‘ ரெட் ஜோன் ‘ என்பது 15 க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்கள் இருக்கும் மாவட்டம் ஆகும். ஒற்றை இலக்க எண் கொண்ட மாவட்டங்கள் அதிலும் புதிததாக 14 நாட்களில் தொற்று ஏற்படாதவை ‘ ஆரஞ்ச் ஜோன் ‘ ஆகும். கொரோனா தொற்று வந்து மேலும் முழுமையாக குணமடைந்தவர்கள் கொண்டதும், 24 நாட்களில் புதிதாக எந்தவொரு நபருக்கும் கொரோனா வராமல் இருந்தால் இது ‘ கிரீன் ஜோன் ‘ ஆகும்.
இது போன்ற வண்ண அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படும்.
இதனை கொண்டு தான் ஊரடங்கு தொடர்வதா அல்லது விலக்கு அளிக்கலாமா என அதிகாரிகளும், மாநில அரசுகளும் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது .
தமிழகத்தில் மொத்தம் 12 மாவட்டங்கள் இந்த ‘ரெட் ஜோன் ‘ பட்டியலில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம்,தஞ்சாவூர், திண்டுக்கல், ஆகியன அடங்கும்