ராணுவ இன்ஜினியரிங் சேவை பணியில் 9,304 பணியிடங்கள குறைப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ராணுவ இன்ஜினியரிங் சேவை பணியில் 9,304 பணியிடங்கள குறைப்பு


புதுடில்லி: ராணுவ இன்ஜினியரிங் சேவை பணியில், மொத்தமுள்ள 13,157 காலிப் பணியிடங்களில், 9,304 பணியிடங்களை அகற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுதப் படையின் ராணுவ பொறியியல் சேவைப் பணிகளில்(எம்.இ.எஸ்.,) போர்த்திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு செலவினத்தை குறைக்கவும், லெப்டினண்ட் ஜெனரல், ஷெகட்கர் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
எம்.இ.எஸ்., பணிகளில் ஒரு பகுதியை, துறையில் பணியிலிருக்கும் ஊழியர்களே செய்துகொள்வது, மற்ற பணிகளை வெளியிலிருப்பவர்களை கொண்டு செய்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இக்குழு பரிந்துரைத்தது. இந்நிலையில் இக்குழு பரிந்துரைத்த, எம்.இ.எஸ்.,ன் 13,157 காலிப் பணியிடங்களில், 9,304 பணியிடங்களை அகற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.