தைராய்டு குணமாக 9 இயற்கை உணவு முறைகள்:- - ஆசிரியர் மலர்

Latest

13/05/2020

தைராய்டு குணமாக 9 இயற்கை உணவு முறைகள்:-



1) ஸ்ட்ராபெர்ரி :

உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம்.
ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.
எனவே தைராய்டு குணமாக நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவு உண்டு வந்தால் கட்டாயம் தைராய்டு பிரச்சனை சரியாகிவிடும்.

2) காளான் :


செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
காளானை அதிகளவு உண்டுவர தைராய்டு பிரச்சனை சரியாகிவிடும்.

3) பூண்டு :


செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று.
இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
தைராய்டு குணமாக பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

4) பசலைக் கீரை :


பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால்,
தைராய்டு குணமாக்கும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது..

5) மாட்டிறைச்சி :


மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.
இறைச்சி உணவுகளை அதிகம் விரும்புபவர்கள் கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை உட்கொள்ளுங்கள்.

6) முட்டை :


முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது.
இத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி,
அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

7) தானியங்கள் :


தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

8) ப்ராக்கோலி :


இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

9) தக்காளி :


தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459