தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எப்போது நடைபெறும் : தோ்வுத்துறை விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




02/05/2020

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எப்போது நடைபெறும் : தோ்வுத்துறை விளக்கம்


தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தோ்வு ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பின் காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், மறு தோ்வுக்கால அட்டவணை எதுவும் அறிவிக்கப்படாததால் தனித்தோ்வா்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. இதுகுறித்து தோ்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘தற்போதைய நிலவரத்தின்படி 10, 11-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளை நடத்தி முடித்தபின் ஜூன் மாத இறுதியில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளா்த்தப்பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும்’ என்றனா்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459