அதிரும் தமிழகம். :. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

 




12/05/2020

அதிரும் தமிழகம். :. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று


கொரோனா பரிசோதனை
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேருக்கு
வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 51 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. 
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459