ஓய்வூதியத் தொகை ரூ. 6 லட்சத்தில் ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு ஊழியர் முருகேசன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஓய்வூதியத் தொகை ரூ. 6 லட்சத்தில் ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு ஊழியர் முருகேசன்


ராமேஸ்வரம், மே.03–
ராமேஸ்வரத்தில் ஊரடங்கால் வருமானம் இன்றி உணவிற்காக தவித்த குடும்பங்களுக்கு ஓய்வூதிய பலனாக கிடைத்த ரூபாய் 6 லட்சத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கிய ஓய்வு பெற்ற மின்சாரவாரிய ஊழியர்.
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாமல் இருக்க கடந்த மாதம் 24 ந்தேதி மாலை 6 மணியிலிருந்து 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது. பிரசித்திபெற்ற ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டது. இவைகளை வைத்தே தொழில் செய்து வருமானம் ஈட்டி வாழ்வாதாரம் நடத்தி வந்த பல குடும்பங்கள் ஊரடங்கால் வருமானம் இன்றி உணவுக்காக போராடினர். இந்நிலை குறித்து அறிந்த ராமேஸ்வரம் மின்சார வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி வந்த முருகேசன் என்பவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இவர் தனக்கு ஓய்வூதியப்பலனாக கிடைத்த சுமார் 6 லட்சம் ரூபாயை வைத்து ஊரடங்கால் வேலையின்றி வருமானமின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்தார். அதனடிப்படையில் சுமார் 400 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினார். பொருட்களை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் மற்றும் மக்கள் அனைவரும் தனது ஓய்வூதிய காலத்திற்கான பணத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கிய முருகேசன் குடும்பத்தினரை வாழ்த்தினர்.