தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 24 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைப்போன்று 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது
. தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல் காற்று வீசக் கூடும் என்பதால், வரும் இரண்டு தினங்களுக்கு பொதுமக்கள் ஒரு பகல் வேளைகளில் வெளியே செல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment