ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3.25 லட்சத்தைத் தாண்டியது - ஆசிரியர் மலர்

Latest

 




23/05/2020

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3.25 லட்சத்தைத் தாண்டியது


ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சிகிச்சை பெறும் நோயாளி ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மாஸ்கோ:
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.38 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது.   
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,26,448 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 150 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,249 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 99 ஆயிரத்து 850-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459