+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்.மாணவர்களின் கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதில் - ஆசிரியர் மலர்

Latest

09/05/2020

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்.மாணவர்களின் கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதில்


 

மாணவர்களும் பெற்றோரும் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு பேச்சாளர்கள் பதிலளித்தனர். அந்த கேள்வி பதில்கள் இதோ:


’விகடன் கல்வி வெபினாரி’ல் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் - பகுதி- 1

Dr. சி.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ், டி.ஜி.பி, ரயில்வே & இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.


சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு
1. IPS அதிகாரியாக, காவல்துறையில் பணிபுரிய உடல்தகுதி அவசியமா? அறிவு சார்ந்து இயங்கும் பிரிவுகள் உள்ளனவா?
“IPS படிப்பதென்பது சிவில் சர்வீஸோடு சேர்ந்து வருவதுதான். மேலும் உடல்தகுதி என்பது மட்டுமே காவல்துறைக்கு பிரதானமானதல்ல. உடல் ஆரோக்கியம்தான் மிக அவசியம். காவல்துறைக்குள் பணிக்குவர சில பயிற்சிகள் அளிக்கப்படும்.
அந்த பயிற்சிகளை மேற்கெள்ள உடல் ஆரோக்கியம் அவசியம். அடிப்படையான உயரம், எடை போன்றவை தேவை. காவல்துறை என்பது Ivestigation சார்ந்த ஒன்று. இங்கு அறிவைக்கொண்டு இயங்குவதுதான் பிரதானம். தொழில்நுட்ப அறிவு சார்ந்த துறைகள் காவல்துறையில் ஏராளம் உண்டு. Forensic, CBI, Crime Branch எனப் பலதுறைகள் உண்டு.”
2. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக 3 அடிப்படை விஷயங்களை சொல்ல முடியுமா?
“1. பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி உலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திதாள்களை வாசிப்பது அவசியம்.
2. கட்டுரை எழுத பழகிக்கொள்ள வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் கட்டுரை எழுதுவது அவசியமான ஒன்று. ஆழமான கட்டுரைகளை எழுத பழகவேண்டும்.
3. செய்ய முடியாது , கடினமானது என நினைப்பதை முதலில் செய்யுங்கள். கடினமான பாடம் என உங்களுக்குத் தோன்றும் பாடத்தை முதலில் படித்துமுடியுங்கள். “
3. எனக்கு விருப்பமான படிப்பைத் தேர்வு செய்வதா, இல்லை பெற்றோர் சொல்லும் படிப்பைத் தேர்வுசெய்வதா?
“உங்களுக்கு எதில் திறமை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்யுங்கள். அதற்கேற்ற படிப்பைத் தேர்வுசெய்யுங்கள். அது எந்த துறையாக இருந்தாலும் சரி, அதில் உங்கள் கவனத்தையும், உழைப்பையும் செலுத்துங்கள். பெற்றோர்களிடம் உங்கள் எதிர்கால கனவை, படிப்பைத் தெரிவியுங்கள். உங்களின் நல்ல கனவுகளை அவர்கள் மறுக்கமாட்டார்கள். உடன் நிற்பார்கள். “
4. மனவலிமை பெறுவதற்கு எப்படி?
” மனவலிமை என்பது படிப்படியாக நாம் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று. பிரச்னைகளை சந்திக்க வேண்டும். சந்தித்து அவற்றை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். உலகில் சாதித்த பலரும் பிரச்னைகளை எதிர்கொண்டு முன்னேறியவர்கள்தாம். அவமானங்களைக் கடந்து வந்தவர்கள்தாம். அந்த அவமானத்தின்போது மனவலிமையை அதிகப்படுத்தியவர்கள்.உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். ஒரு புத்தகம் எழுத முதலில் ஒரு பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். பிறகு தினந்தினம் எழுதும் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். போலவே, வ்வொரு நாளும் உங்களின் இலக்கு நோக்கிய தொடர்ச்சியான உழைப்புதான் உங்களின் மனவலிமையை அதிகப்படுத்தும். “

B.சுப்பாராமன், துணைத் தலைவர் மற்றும் மதுரை மையத் தலைவர், எச்.சி.எல் நிறுவனம்.

1. ஐ.டி துறையின் எதிர்காலமென்பது எவ்வாறாக இருக்கும். வரும்காலங்களில் அதில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்?
“ஐ.டி துறை என்பது வெறும் ஐ.டி கம்பெனிகள் மட்டும் இல்லை. நகை வியாபாரம், பெரும் தொழிற்சாலைகள், ரயில்வே துறை, போக்குவரத்துத் துறை, ஏர்லைன்ஸ் என அனைத்திலும் ஐ.டி வந்துவிட்டது. ஐ.டிதான் எதிர்காலம் என்ற நிலை வந்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலான எதிர்காலம் என்பது ஐ.டியில் பிரகாசமான உள்ளது. அனைத்து துறைகளிலும் தவிர்க்கமுடியாத பிரிவாக ஐ.டி உருவெடுத்துள்ளது.
அனைத்து துறைகளிலும் ‘ஐ.டி செக்டார்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தொழில்நுட்பத்தில்தான் மாற்றம்வரும். அந்த தொழில்நுட்பங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நாம் மாறவேண்டும். அதுதான் அவசியம். “

B.சுப்பாராமன்

B.சுப்பாராமன்
2. ஐ.டி துறையில் பணிக்குச்செல்ல எந்த படிப்பு உகந்ததாக இருக்கும்?
“நான் HCL நிறுவனத்தின் சார்பாக பேசுகிறன். HCL – நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புபவர்கள் +2 முடித்த பிறகே அதற்கு விண்ணப்பிக்கலாம். சிலருக்கு Amazon, Google போன்ற நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு இருக்கலாம். அவர்கள் NIT போன்ற நல்ல கல்வி நிறுவனங்கள், லேப் வசதிகள் நல்லமுறையில் உள்ள பிற தனியார், அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் ஐ.டி துறை அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை தேர்வுசெய்து படிக்கலாம். இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யலாம். “

டி.நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்

1. நுழைவுத்தேர்வுகள் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்… என்னென்ன நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன?
“நிறைய கல்லூரிகளில் பல துறைகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன
. Verbal, Analytical சார்ந்த நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. ஓவியம் நன்றாக வரைபவர்களுக்கு அந்த துறை சார்ந்த நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. அறிவியல் நீங்கள் நன்றாக படிப்பீர்கள் எனில் அதுசார்ந்த நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. இப்படி விளையாட்டு, சமூக அறிவியல், பொது அறிவு என ஒவ்வொரு நுழைவுத்தேர்வும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலும் நீங்கள் பள்ளிகளில் படித்த பாடங்களில் இருந்துதான் நிறைய கேள்விகள் கேட்பார்கள். வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. நுழைவுத் தேர்வுகளை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு எழுதலாம். நிறைய நுழைவுத்தேர்வுகளுக்கு நாம் விண்ணப்பிப்பதே இல்லை. லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்த போட்டியுள்ள நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொள்வதில்லை. “
2. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்யும்போது நாம் கவனிக்கவேண்டியவிஷயங்கள் விஷயங்கள் என்னென்ன?
ஒரு நல்ல கல்லூரி என்பது அந்தக் கல்லூரியிலிருந்து 50 லிருந்து 60 பேட்ஜ் மாணவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். பழைமையான கல்லூரிகள் பலவும் அவர்கள் பல துறைகளில் சிறந்தவர்களாக , திறமைசாலிகளாக இருப்பார்கள். அதை வைத்து அந்தக் கல்லூரியை மதிப்பிடலாம். ஆனால் இதை வைத்து மட்டுமே மதிப்பிட முடியாது. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதில் ஒருகூறு. அரசுக் கல்லூரியைத் தேர்வு செய்வதை பொதுவாக பரிந்துரை செய்வதற்கு இதுபோன்ற காரணங்கள் உண்டு. வறுமை காரணமாக நிறைய மாணவர்கள் ஏழ்மையான சூழலில் இருப்பார்கள்.அவர்கள் வறுமையைமீறி படித்து வெல்வார்கள். அதுபோலதான் கல்லூரியைத் தேர்வு செய்வததத்தாண்டி , அங்கு நாம் நமது திறமையை நிரூபிக்கையில் நமக்கான கதவுகள் திறக்கும். “
3. நுழைவுத் தேர்வுகளுக்கு என தனியாக பயிற்சி எடுக்க வேண்டுமா?
” உங்கள் பாடத்திட்டத்தைத் தாண்டி எந்தக் கேள்வியும் வரப்போவதில்லை. நீட் போன்ற தேர்வுகளுக்குக்கூட பாடப்புத்தகத்துக்குள் இருந்துதான் கேள்விகள் வரும். நாம் எவ்வளவு தீவிரமாகப் படிக்கிறோம் என்பதுதான் அவசியம். அரசு சார்பிலும் பல பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முன்னாள் மாணவர்கள் பலர் நன்முறையில் பயிற்சி வகுப்புகளுக்கு உதவுகிறார்கள். அதுபோன்ற வாய்ப்புகளை பயன்டுத்த வேண்டும். அதற்கு தீராத தேடல் வேண்டும். அந்த தேடலுக்கு மாணவர்கள் முன்வந்தால்போதும். வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

கல்வியாளர் நெடுஞ்செழியன்

கல்வியாளர் நெடுஞ்செழியன்
4. இன்ஜினீயரிங், மருத்துவம் தவிர்த்து பிரபலமடையாத படிப்புகள் பல உள்ளன. அவற்றை எப்படி தேர்வது செய்வது?
“படிப்பைத் தேர்வு செய்வதென்பது மிகமுக்கியமான முடிவு. நிறைய தேடிப் படிக்க வேண்டும்.
ஆழமாக அந்த துறை குறித்து அலசாமல் நாம் முதற்கட்டத்தை யோசிக்காமல் , இறுதிக்கட்டத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம். நமக்கு தெரியாத பல துறை சார்ந்த பிரகாசமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அந்தத் தகவல்களை தேடித் தெரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி எநந்தப் படிப்பையும் படிக்கலாம். அதை சரியான திட்டமிடலோடு நன்கு படிக்கவேண்டும்.
5. வேலைவாய்ப்புக்காக மட்டும்தான் கல்வியா?
” வேலைவாய்ப்புக்காகத்தான் கல்வி என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே வேலைவாய்ப்பைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தேவையில்லை. நாம் படிக்கும் துறைசார்ந்து ஆழமாகப் படிக்கவேண்டும். அதுதான் அடிப்படை. சுந்தர் பிச்சை படிக்கும் காலத்தில் ‘Google’ நிறுவனமே துவங்கப்படவில்லை.
எதிர்காலத்தில் வாய்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் உருவாகலாம். வேலைவாய்ப்பைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. சவால்களை எதிர்கொள்ள கற்றுத் தருவதுதான் கல்வி. துறை சார்ந்த எந்த வேலைகிடைத்தாலும் அதை செய்யவதற்கான தன்னம்பிக்கையைத் தருவதுதான் கல்வி.
6. B.A. தமிழ் , B.A English போன்ற Literature படிப்புகளைத் தேர்வுசெய்து படிக்கலாமா?
” நிச்சயமாகப் படிக்கலாம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘Foriegn Language’ பற்றிய படிப்புகள் உள்ளன. அதை பெரும்பாலும் பலரும் தேர்வு செய்வதில்லை. ‘Foriegn Language’ படித்தவர்களுக்கு பன்னாட்டு தூதரகங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. “

விகடன் கல்வி எக்ஸ்போ

விகடன் கல்வி எக்ஸ்போ
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459