தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 24ம் தேதியுடன் முடிந்தன. அதேநேரத்தில், மார்ச், 24ல் நடந்த தேர்வுகளில், 34 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவில்லை.
அவர்களுக்கு மட்டும், வேறொரு நாள் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான விடைத்தாள்களை, வரும்,
18ம் தேதி முதல் திருத்தவும், ஜூனில் தேர்வு முடிவை வெளியிடவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளை தவிர, மற்ற அரசு மேல்நிலை பள்ளிகளிலும், தனியார் மேல்நிலை பள்ளிகளிலும், விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.