தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 2 May 2020

தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி


தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:
தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்றைக்கு மேலும் ஒருவர் பலியாக தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 10,049 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 231 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.