ஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்


2020ல் கொரோனா வைரஸ் பீதியால் உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரமும் தடுமாறுகிறது பலருக்கும் வேலையிழப்பு வருமானமில்லை என பிரச்சினையில் சிக்கியிருக்க பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை, ஆரோக்கியம் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் யாருக்கு அமையும் - எந்த யோகம் அமையும்சவாலான மாதம்கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பல அற்புதங்கள் நிகழப்போகிறது. சூரியன் சுக்கிரன் கூட்டணியால் சில சந்தோஷமான விசயங்கள் நடந்தாலும் வேலை, தொழிலில் சில சவால்கள் வரலாம். அதை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். ஏழரை சனி நடந்தாலும் சனி வக்ரமடைவதால் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். வேலையில் சில பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். குருபகவானின் வக்ர சஞ்சாரம் பார்வையால் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும்.
உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும். சிலருக்கு தன லாபம் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.தொழில் வேலைநீண்ட நாள் கழித்து பிசினஸ் தொய்வின்றி போகும் சிலருக்கு லாபம் கிடைக்கும். சுக்கிரன் வக்ரமடைந்திருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. விழிப்புணர்வும் அவசியம். சுக்கிரனை குரு பார்ப்பதால் நன்மை. வக்ரமான குருவினால் புதிய வேலை, இடமாற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் திட்டமிடாத செயல்கள் எதிர்பாராமல் நடக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது செழிப்பான காலம் என்றாலும் ராகு, புதனோடு சூரியன் இணைவதால் தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.குடும்பத்தில் குதூகலம்மாத இறுதியில் செவ்வாய் இடமாற்றம் புத்திக்கூர்மையை அதிகரிக்கச்செய்யும். ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4ல் இருந்து 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மைதான். மாணவர்கள் யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை சரியாக தேர்வு செய்வீர்கள். ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிதாக திருமணமான கும்பராசிக்கார தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் தேடி வரும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் மாத பிற்பகுதியில் பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.தைரியம் தரும் மாதம்மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்க ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும் இல்லைன்னா உங்க மேலே தேவையில்லாத பழி வந்துடும். உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும் உணவு விசயத்தில கவனமாகவும் கட்டுப்பாடுடனும் இருக்கணும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.வியாபாரத்தில் லாபம்உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
நிதி நிலைமையும் பொருளாதார சூழ்நிலையும் நன்றாகவே இருக்கும். திடீர் பண வருமானம் உங்க வங்கி சேமிப்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை நல்ல இடத்தில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.திருமண வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் சொல்ல முடியாமல் தவித்த காதலை சொல்லிவிடுவீர்கள். காதல் பயணங்களை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். சுப காரிய முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக புரிந்து படிங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளலாம்.

No comments:

Post a Comment