வீடுகளுக்கு வெளியே 20, 50 ரூபாய் நோட்டுகள்.. மக்கள் அதிர்ச்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 3 May 2020

வீடுகளுக்கு வெளியே 20, 50 ரூபாய் நோட்டுகள்.. மக்கள் அதிர்ச்சிஇந்தநிலையில், சென்னை மாதவரம் பகுதியில் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதவரம் பகுதியில் உள்ள மாணிக்கம் தெருவில் உள்ள சில வீடுகளுக்கு வெளியே 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை சிலர் சைக்கிளில் வந்து வீசிச் செல்வதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், “சைக்கிளில் வந்த சிலர் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் சத்தம் போடவும் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ஒரு வீட்டின் முன் 20 ரூபாய், இன்னொரு வீட்டின் முன் 50 ரூபாய் நோட்டுகளை போட்டவர்கள் ஒருவீட்டில் 100 ரூபாய் தாளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.