மே 19-ம் தேதி முதல் ஆசிரியர்-ஊழியர்கள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு.- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மே 19-ம் தேதி முதல் ஆசிரியர்-ஊழியர்கள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு.- அண்ணாமலைப் பல்கலைக்கழகம்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக  (மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் செவிலியர் துறை தவிர்த்த) மே 19-ம் தேதி முதல் ஆசிரியர்-ஊழியர்கள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே பணிபுரியப்  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளது, 
பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், அனைத்து  புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பல்வேறு துறை இயக்குநர்கள், நிதி அலுவலர்,
பிரிவு அலுவலர்கள் ஆகியோர் குறைந்தபட்ச ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு, சமூக இடைவெளி பின்பற்றி, பல்கலைக்கழக அன்றாட பணிகளை மேற்கொள்வார்கள். 

பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலங்களும் மே.20-ம் தேதி முதல் இயங்கும். மேலும், தமிழக அரசு அறிவித்தபடி கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் பணியிடத்தில் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் துணைவேந்தர் வே.முருகேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment