கொரோனாவில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை முந்திய ரஷ்யா - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 7 May 2020

கொரோனாவில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை முந்திய ரஷ்யா


மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை முந்தி 5வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 11,231 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா மையம் கொண்டுள்ள மாஸ்கோவில் பாதிக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மாஸ்கோவில் மட்டும் 6,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 1,625 ஆக அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகியுள்ளது.
மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனையை அதிகரித்ததே காரணம். நிலைமை ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4.8 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மே 12ம் தேதிக்கு பின் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சோபியானின் கோரிக்கைக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார்.


மாஸ்கோ மற்றும் ரஷ்யாவில் பிற மாகாணங்கள் ஊரடங்கில் 6வது வாரத்தில் உள்ளனர். மாஸ்கோவில் வசிப்போர் உணவு மற்றும் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியே நடமாட வேண்டாமெனவும்
, வேறு இடங்களுக்கு பயணிக்க டிஜிட்டல் பாஸ் வைத்திருப்பது அவசியமென அறிவுறுத்தப்பட்டனர். கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, கொரோனா வைரஸ் இறப்புகளை சரியாக அடையாளம் காணத் தவறியதன் மூலம் கொரோனா உயிரிழப்பின் உண்மையான எண்ணிக்கையை அதிகாரிகள் மூடிமறைக்க முயற்சிப்பதாக சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் இதனை மறுத்துள்ள அதிகாரிகள், மற்ற நாடுகளை விட ரஷ்யாவில் தாமதமாக கொரோனா பாதிப்பு பதிவானதால், எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.