நாடு முழுக்க சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து.. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 6 May 2020

நாடு முழுக்க சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து..நாடு முழுக்க பத்தாம் வகுப்பு (CBSE 10th board exams) சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியிலேயே தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவை ரத்து செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கலவரம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த வட கிழக்கு டெல்லி பகுதியில் மட்டும் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளித் தேர்வின்போது எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
[அடுத்த இரண்டு நாட்களில் சிபிஎஸ்இ 12வது வகுப்பு தேர்வுக்கான தேதிகளை தனது அமைச்சகம் அறிவிக்கும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் 76 தாள்கள் கோவிட் -19 மற்றும் அதைத் தொடர்ந்த லாக்டவுன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டன. மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 29 கோர் பேப்பர் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியது.
ஆனால் இப்போது தேர்வு தேவையில்லை என கூறியுள்ளது.
செவ்வாயன்று மனிதவள அமைச்சகம் "10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன" என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இது மாநிலங்களால் நடத்தப்படும் அனைத்து பள்ளி வாரியங்களுக்கும் பொருந்துமா அல்லது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இக்கு மட்டுமே பொருந்துமா என்பதை தெளிவுபடுத்தவில்லை
Source-.oneindia