கொரோனா பாதிப்பு குறைவான கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25ல் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2020

கொரோனா பாதிப்பு குறைவான கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25ல் தொடக்கம்


கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார்

கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25ல் தொடங்கி ஜூலை 4 வரை நடைபெற உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் 10-ம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பரவும் அச்சம் காரணமாக இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் ஜுன் 25ல் 10ஆம் தேர்வு தொடங்கப்படுவதாகவும் அதற்கான தேதிகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் ஜூன் 25 தொடங்கி ஜூலை 4ஆம் தேதி முடிவடையும். பியூசிக்கான ஆங்கிலத்தாள் தேர்வு ஜூன் 18ல் நடைபெறும்.
தேர்வு எழுதும் கூடங்களில் மாணவர்கள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அணிந்திருக்க வேண்டும். மற்றும் சானிடைசர்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட கோவிட் 19 தொடர்புடைய வழிகாட்டுதல்களும் தேர்வுக்கூடத்தில் பின்பற்றப்படும்.
இவ்வாறு கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இதற்கிடையில் கர்நாடகாவில் இதுவரை 1,147 பேர் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்பலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459