சட்டீஸ்கர் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 14 May 2020

சட்டீஸ்கர் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து


புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலத்தின் மேல்நிலைக் கல்வி வாரியம், கொரோனாவால் விடுபட்ட 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் நடத்தப்பட்ட இடைநிலை தேர்வுகள் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியிட முடிவு எடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் தேர்வு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டீஸ்கரில், ஊரடங்கு அமலானதால் 10ம் வகுப்பு புவியியல் தேர்வும், 12ம் வகுப்பில் சில துணை பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடைபெறாமல் இருக்கும் இத் தேர்வுகள், ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் நடத்தப்பட்ட இடைநிலை தேர்வுகளின் படி, இப்பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பாடங்களில், இடை நிலை தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது