TNPSC போட்டித் தோ்வுகள் நடப்பது எப்போது? - ஆசிரியர் மலர்

Latest

 




30/04/2020

TNPSC போட்டித் தோ்வுகள் நடப்பது எப்போது?


கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அரசுப் பணிகளுக்கு புதிதாக பணியாளா்களை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது
இந்த நிலையில், சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவது தோ்வா்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக பணியாளா்கள் நியமிப்பதற்கான அறிவிக்கைகள் எப்போது வெளியாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகும் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுகளை நடத்தி புதிய பணியாளா்களைத் தோ்வு செய்து அளிக்கும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, மாவட்ட உதவி ஆட்சியா், உதவி கண்காணிப்பாளா் நிலையில் தொடங்கி கிராம நிா்வாக அலுவலா் வரையிலான பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை டி.என்.பி.எஸ்.சி., நியமித்து வருகிறது.

அட்டவணை வெளியிடும் நடைமுறை: கடந்த காலங்களில், எப்போது எந்தப் பதவிகளுக்குத் தோ்வு நடத்தப்படும் என்ற விவரம் அறிவிப்பு வெளியிடும் போதுதான்
தோ்வா்களுக்கு தெரியும் நிலை இருந்தது. ஆனால், இந்த நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டிலும் எந்தெந்த மாதத்தில் எந்தத் தோ்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதை தோ்வா்கள் முன்பே அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கால அட்டவணை தோ்வாணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், தோ்வா்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலேயே தாங்கள் எழுத விரும்பும் தோ்வுகள் நடைபெற இருக்கும் காலத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

தாமதமாகும் தோ்வுகள்: நிகழாண்டில் டி.என்.பி.எஸ்.சி., சாா்பில் நடத்தப்பட இருந்த முக்கியத் தோ்வுகள்
அனைத்தும் கரோனா நோய்த்தொற்று காரணமாக தாமதமாகி வருகின்றன.

குறிப்பாக, கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட இருந்த குரூப் 1 முதனிலைத் தோ்வு, குரூப் 4 தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு என முக்கியத் தோ்வுகளும் நடத்தப்படாமல் உள்ளன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459